வண்ணாரப்பேட்டையில் நேற்று, பழனி, பிரதீஷ், நித்திஷ், சந்துரு ஆகிய நான்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் சென்றவர் தவறவிட்ட மொபைல் போனை அவர்கள் கண்டெடுத்து, த.மு.மு.க. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களின் இந்த நேர்மையை போலீசார் பாராட்டி, அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கி கொடுத்து ஊக்குவித்தனர்.
