ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஸலஃபி நகர் கிளை, திருச்சி மாவட்டம் சார்பாக SIR விழிப்புணர்வு முகாம்,
நாள் : 15.11.2025 சனிக்கிழமை, நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை...
இடம்: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல், ஸலஃபி நகர், எர்போர்ட், திருச்சி -07...
அதற்கான Enumeration Form-வீடு தேடி வழங்கி வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்..
BLO-தேர்தல் அதிகாரிகள் வழங்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் குழப்பங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகவும், நமது வாக்குரிமையை இழந்து விடாமல் இருக்கவும், Enumeration Form-ஐ பூர்த்தி செய்வது எப்படி? என்ற தலைப்பில், அதனைச் சார்ந்த வல்லுநர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
எனவே, ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகிகளும் தங்களது மஹல்லாவில் உள்ள படித்த இளைஞர்களும் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களுக்கான தீர்வுகளை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும், மேலும் தங்களது மஹல்லா மக்களுக்கும் இதனை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு மஹல்லாவிலும் ஆர்வமுள்ள குழுக்களை அமைத்து, தீவிர தேர்தல் வாக்காளர் திருத்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், அக்கறையுடன் நம் அனைத்து சமூக மக்களும் செயல்படுமாறு வலியுறுத்துகிறோம்...
