இன்று இந்தியாவில் Paytm, Google Pay, PhonePe ஆகிய செயலிகள் மக்கள் வாழ்வில் பொதுவாகவே பரவலாக இருக்கின்றன. தற்போது, இந்திய தொழில்நுட்ப அதிகாரத்தில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் Zoho நிறுவனம், “சுயசார்பு இந்தியா” என்ற நாட்டு சார்ந்த இலக்கை முன்னிட்டு, ஏற்கனவே வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக அரட்டை எனும் செயலியை zoho வெளியிட்டது. இந்நிலையில் இந்தியர்களுக்கென சொந்தமாக உருவாக்கிய Zoho Pay-ஐ 2025 அக்டோபரில் வெளியிட்டது.
Zoho Pay-யின் முக்கிய அம்சங்கள்:
Zoho Pay செயலி, Arattai என்னும் Zoho வின் மெசேஜிங் செயலியுடனும் தனிப்பட்ட செயலியாகவும் பயன்படுத்தலாம்.
இதனால், பயனர்கள் மெசேஜ் அனுப்பும் போதே அவ்விடத்தில் இருந்தே நேரடி பண பரிமாற்றங்களை செய்ய முடிகிறது.
மேலும், இந்த செயலி பாதுகாப்பான மற்றும் தடையில்லா பண பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குகிறது.
Zoho Payments மூலம் பல்வேறு தகவல்தொடரும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் UPI, நெட் பேங்கிங், பேங்க் கார்டுகள், மற்றும் மற்ற தளங்களின் மூலம் பணம் செலுத்தலாம் அல்லது பெறலாம்.
இந்தியத்தன்மை மற்றும் வணிகக் கணினிகளில் ஒருங்கிணைவு:
Zoho Pay, இந்தியாவின் B2B கட்டண சந்தையின் விரிவை நோக்கு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது Zoho Books, Zoho Billing, Zoho Invoice போன்ற தொழில் பயன்பாட்டு மென்பொருட்களுடன் நேரடியான ஒருங்கிணைவை வழங்குகிறது.
இதில் பில்லிங், இன்வாய்ஸ் உருவாக்குவதைத் தொடங்கி, பாதுகாப்பான பண பரிமாற்றம் மற்றும் உடனடி வசூல் வரை பல்வேறு பணிகள் விரைவாக நடக்குகின்றன.
எதிர்கால எதிர்பார்ப்புகள்:
Zoho Pay, பிரதானமாக இந்திய சந்தைக்கு போட்டியளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அளவிலான வணிகர்களும் மற்றும் பொதுப் பயனர்களும் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். Zoho-வின் இந்த புதிய முயற்சி, இந்தியாவின் நிதி தொழில் நுட்பத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
