தமிழக அரசின் மடிக்கணினி திட்டம் :
2000 கோடி நிதி ஒதுக்கீட்டில் 20 லட்சம் மடிக்கணினியை (2025-2026)-ஆம் கல்வியாண்டில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டது.
இதில் குறைந்த விலையில் லேப்டாப் கொள்முதல் செய்ய DELL, Acer மற்றும் HP மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தற்போது, அவை தயார் நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
யார் யாருக்கு லேப்டாப் ?
1. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கப்படும்.
பின்னர், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
2. அரசு பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
3. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
5. தனியார் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் மற்றும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
6. தனியார் பள்ளிகளில் படித்து உதவி தொகை பெரும் பட்டியல் இன மாணவர்களுக்கு வழங்கப்படும்.
*இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். பின்னர், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்*
எப்போது வழங்கப்படும்?
டிசம்பர் மாதத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் மடிக்கணினிகள் வினியோகம் செய்யப்படும் எனவும் பிப்ரவரிக்குள் விநியோகம் முழுவதும் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...



