ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சாலையில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சமீபத்தில் இடிக்கப்பட்டது..
பின்பு நவீன வசதிகளுடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட நிலையில் உள்ள ஆதார் மையம் கட்டப்பட உள்ள நிலையில், ஏற்கனவே இந்த ஆதார் மையத்தால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
மேலும், விரிவுபடுத்தி அதே இடத்தில் கட்டினால் அதிகம் விபத்துக்கள் ஏற்படும், சாலை ஓரங்களில் உள்ள வாகனங்கள் விபத்துக்கள் ஏற்பட நேரிடும் என ஊர் பொதுமக்கள் தொண்டி பேரூராட்சிக்கு வேண்டுகோள் வைத்தனர். மேலும், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் உள்ளது. எனவே இடையூர் இல்லாத வகையில் ஆதார் மையத்தை வேறு இடத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் தொண்டி பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்...
