காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால், புதிய அணை கட்ட தேவையில்லை என SC-யில் தமிழ்நாடு தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிதாக அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆரம்ப கட்டத்திலேயே தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
