திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கரூர் பைபாஸ் சாலை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே போதை மாத்திரை விற்றதாக முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ஆசிக்பாஷா, அண்ணா சிலை பகுதியைச் சேர்ந்த மனோஜ், சிந்தாமணி படுகை நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.