திருச்சி நொச்சியத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஜூலை 10 ஆம் தேதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மத்திய சிறையில் உள்ள அவரிடம் இந்தக் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான சார்வு வழங்கப்பட்டது.
