திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசா காலாவதியான வெளிநாட்டு நபர்களுக்கு விளக்க கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் விசா காலாவதியாகி தங்கியுள்ள 64 வெளிநாட்டு நபர்கள் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது சட்டப்படி தவறு என்பதை வெளிநாட்டு நபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் தங்க வேண்டுமெனில் அவரகள் விசாவை இணையதளம் வழியாக எவ்வாறு புதுப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விளக்க உரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
