இதனால் மேட்டூர் அணை ஐந்தாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நீர்வளத் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 117.56 அடியாக உள்ளது.
