லால்குடி அருகே புள்ளம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் (40), கடந்த 3ஆம் தேதி மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது,
சாலையில் மேய்ந்த பசுமாடு மோதியதில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குடி காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
