டோல்கேட் அகற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
0
ஜூலை 27, 2025
உயர்நீதிமன்றத்தில் டோல்கேட்டை அகற்ற வைக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்; ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை போகலுாரில் சட்டவிரோதமாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், ராமநாதபுரம் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்றார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
