ராமநாதபுரம் மாவட்டத்தில் 8420 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களிலும், ரகுநாதபுரம், பத்ராதரவை, வாலந்தரவை, பெரியபட்டினம் போன்ற இடங்களிலும் தென்னை மானாவாரியாக பயிரிடப்படுகிறது.
போதிய மழையின்மையால் தேங்காய் விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.70-க்கும், ஒரு தேங்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையும் விற்பனையாகிறது.

