ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் தலை விரித்தாடும் ஊழலால் மக்கள் பாதிப்பு.
1, குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல் என்ற போர்வையில் மட்டும் ஒவ்வொரு மாதமும் மூன்று லட்சத்திற்கும் மேல் சுரண்டப்படுகிறது,
2, தெரு விளக்கு பராமரித்தல் பழுதி நீக்கம் என்ற போர்வையில், பல லட்சங்கள் முறைகேடு , தன்னுடைய நிறுவனத்திலேயே அனைத்து பொருள்களும் கொள்முதல் செய்து கொள்வது மோசடி பில் எழுதி மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது,
3, செயல் அலுவலரின் அதிகாரத்துக்குட்பட்ட 10,000 ரூபாய் வரவு செலவுக்கான கணக்கை எப்படியெல்லாம் திரித்து எழுதி இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்
ஒரு மாதத்திலேயே இத்தனை லட்சம் முறைகேடுகள் நடைபெறும் பொழுது,
ஒவ்வொரு ஒப்பந்த பணிகளிலும் இவர்கள் பெரும் கமிஷன் என இவர்களுடைய ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.
மற்ற மற்ற வகையில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, கட்டுமான அனுமதி பெறுபவர்களிடம், என்ன என்னவெல்லாம் இங்கு நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் ..
ஆனால் ஒவ்வொரு மாதமும் கணக்கெழுதி அடிக்கும் கொள்ளையை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளேன்....
ஒரு மின் மோட்டாரை சரி செய்ததாக மாதா மாதம் இவர்கள் எழுதும் கள்ளக் கணக்கில் பல புதிய மோட்டார்களை வாங்கிவிடலாம். ஆனால் பாருங்கள் எப்படியெல்லாம் கம்பி சுத்தி கணக்கு எழுதுகிறார்கள் என்கின்றனர் மக்கள்..
