ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை செஸ் பைனலில், சக நாட்டு வீராங்கனையான ஹம்பியை வீழ்த்தி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜார்ஜியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். நாக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா மற்றும் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறினர். அதுமட்டுமில்லாமல், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
