சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் அல்-வலீத் பின் காலித் 35-வது வயதில் காலமானார். 2005-ல் கார் விபத்தில் சிக்கி 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோமாவில் இருந்த அல்-வலீத் பின் காலித்தை பொதுமக்கள் தூங்கும் இளவரசர் என அழைத்து வந்தனர். இவர் சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஜீசின் கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது..

