இராமநாதபுரம் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
இராமநாதபுரம் மாவட்ட உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, உணவு பரிமாறுதல் மற்றும் பார்சல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வாழை இலைகள், பார்ச்மென்ட் பேப்பர்களை பயன்படுத்த வேண்டும் எனவும், 14 நாட்களுக்குள் விதிகளை பின்பற்றாவிட்டால் திடீர் ஆய்வு மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
