தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சரியாகத்தான் உள்ளது என்று பலர் நினைக்கலாம் ஆனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் முதல்வரின் கையில் இருக்கிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
சமூக நீதி சம்பந்தமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எல்லாம் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறதா என்பது கேள்விக்குறி? திராவிட மாடல் ஆட்சி பிறப்பிக்கும் உத்தரவுகள் 100% நிறைவேற்றப்படுவதில்லை குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு அரசு இட ஒதுக்கீடுகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு பல்வேறு துறைகளில் வைக்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10% உயர் ஜாதி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தமிழகதிலும் மறைமுகமாக அமல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
முக்கிய அரசு துறைகளில் கல்வி நிறுவனங்களில் சாமானிய ஏழை எளிய மக்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரம் கல்லூரிகளின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடியும். ஆனால் அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது என்று வருத்தப்படும் அளவிற்கு கல்வி வேலை வாய்ப்பு உயர் கல்வி ஆகியவற்றில் தொடர் புறக்கணிப்பும், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய படிப்புகளில் புறக்கணிப்பு மறைமுகமாக நடைபெற்று வருகிறது.
கட் ஆப் மதிப்பெண்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு அவர்கள் அடைய முடியாத அளவிற்கு இந்தமுறை புறக்கணிக்கப்பட்டுவருகிறது.
மாறாக உயர் வகுப்பினர் மேற்படி உயர்கல்விகளை இலகுவாக அடையும் அளவிற்கு மறைமுக விதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்திலும் வட மாநிலங்களைப் போன்ற சமூக நீதி புறக்கணிப்பு மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வெறும் வெற்றுவிளம்பரம் மட்டுமே திராவிட மாடலாக இல்லாமல் இது போல் மறைமுகமாக தொடுக்கப்படும் மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் சமூக நீதிப் புறக்கணிப்பை அரசு உரிய முறையில் கண்காணித்து அவர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே உண்மையான திராவிட மாடலாக இந்த ஆட்சி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நீடித்தால் வரும் காலங்களில் திராவிட மாடல் காவி மாடலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பாதிக்கப்படுபவனில் ஒருவனாக மக்கள் தொண்டன்
