பல்வேறு கூட்டணி கட்சியில் உள்ள கும்பிடு குருசாமிகள் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடித்து வரும் நிலையில் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை கேட்க வேண்டிய முறையில் கேட்க தயங்கும் உறுப்பினர்கள் வலம் வரும் தமிழக சட்டப்பேரவையில் இன்று வேல்முருகனின் பேச்சு சிறப்பு👍
இதுகுறித்து தமிழக முதல்வருக்கோ பெரும் தலைகுனிவாக போய்விட்டதாம் இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் , முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்புடையதுதானா?
பேரவைத் தலைவர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருமையில் பேசியது மற்றும் அமைச்சர்களை கை நீட்டி பேசியதை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார். சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது. அவர் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். இதுபோல இனிமேல் யாராவது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் பேச வேண்டிய இடத்தில் காரசாரமாக பேசினால் தானே வேலை நடக்கும் அது கூட அப்பாவுக்கு தெரியவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக் கூறியபடி, பேச வாய்ப்பு கேட்டு அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி நடந்துவந்த வேல்முருகன், கைநீட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.