குஜராத் மாநிலம் துவாரகா என்ற ஒரு பகுதியில் 520க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து ஒரே நேரத்தில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு இடத்தில் மேற்படி கட்டிடங்கள் செயல்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக ஆளும் குஜராத் அரசு கூறுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான புறம்போக்கு இடங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்த செயலை பார்க்க முடிகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கு பல நூறு ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்களை ஒட்டுமொத்தமாக காலி செய்து ஒன்பது மசூதிகள், 60க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என ஒரு பகுதியையே அழித்து போர்க்கள பூமியை போல் ஒரு சமூகத்திற்கு எதிரான நடவடிக்கையை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்துக்களின் புனித பூமியில் முஸ்லிம்கள் வாழக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கூறப்படும் நிலையில் பெரும்பான்மை மக்களுடைய ஆன்மீக தல வழிபாட்டை விரிவுபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஒரு சமூகத்திற்கு எதிரான பகிரங்க அடக்குமுறை நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக மாநிலத்தில் ஆணும் பாஜக அரசு மிக தைரியமாக செய்து வரும் நிலையில் முஸ்லிம்களுடைய பாதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு கூட தைரியம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சமூகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை எந்த ஒரு இந்திய ஊடகங்களிலும் வெளிவராத நிலையில் முழுவதுமாக இந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டு சர்வதேச சமூகங்களுக்கு மத்தியில் bbc ஊடகம் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் பகிரங்கமான சான்றாக உள்ளது.
பாபர் மசூதி வழக்கை சர்வதேச நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லாததும் தொடர்ந்து இந்தியாவின் மதச்சார்பின்மை ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் இது போன்ற செயல்பாடுகளை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருப்பதும் வரும் காலங்களில் மிகப்பெரிய பின் விளைவுகளை உருவாக்கிவிடும் என்று சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
