டிசம்பர் 12, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் தொடர்ந்து பொது நோயாளிகள் அவதியுடன் நிலைதொடர்கிறது.
தற்காலிக பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் மிகப்பெரிய மக்கள் பெருக்கத்தை உள்ளடக்கிய தொண்டிபேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இன்றியமையாத தவிர்க்க முடியாத அவசர பொது மருத்துவமனையாக செயல்படுத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளநிலையில், அடிப்படை பொது மருத்துவம் பார்ப்பதற்குகூட நிரந்தர நிரந்தர மருத்துவர்கள் இல்லாத அவலநிலை தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் நிலவுவதுவேதனை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது..
இந்நிலையில் சாமானிய பாட்டாளி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும்.. தற்போது உள்ள நிலையில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு நிரந்தர போதிய மருத்துவர் பணியமத்தவும்..
ECR மெயின் சாலையில் அதிகமாக ஏற்படும் விபத்துக்களால் பாதிக்கப்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் அவசரகால சிகிச்சையை நிரந்தரமாக இங்கு செயல்படுத்தவும் பொது மக்களால் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தொண்டியை பொறுத்தவரை இப்பகுதியில் முக்கிய பொறுப்பாளர்கள் பெரும்புள்ளிகள் எல்லாம் வசதி படைத்தவர்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாமானிய மக்களை பற்றி கவலைப்படுவதில்லை அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் ராமநாதபுரம் மதுரை போன்ற பெருநகரங்களை நோக்கி தங்களுடைய சொந்த வாகனங்கள் மூலம் பயணித்து வருகிறார்கள்.
ஆனால் பெருமளவு ஏழை எளிய பாட்டாளி மக்களைபற்றி அவர்கள் சிந்திக்க தயார் இல்லை.
இந்நிலையில்தான் சாமானிய மக்களின் குரலாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மக்கள் நல பணிக்குழு என்ற whatsapp குழுமத்தை துவங்கி மக்களுடைய அன்றாட தேவைகளை துயரங்களை துடைப்பதற்கான பல்வேறு சமூக சேவைகளை இந்த குழு செய்து வருகிறது.
இவர்களுடைய பணிகளில் ஒன்றாக சாமானிய மக்கள் பெருமளவு பயன்படுத்தி வரும் இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும் தற்காலிக மருத்துவர்களை கொண்டு சிகிச்சை நடத்திவரும் நிலையைப் போக்கி நிரந்தர மருத்துவர் பணி நியமனம் செய்யவும்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த தொண்டி அரசு மருத்துவமனையை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும். கோரிக்கை வைத்து மிகப் பெரிய ஒரு போராட்டத்தை இவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்தப் போராட்டமானது எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் பொதுமக்களை கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் தொண்டி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவர் பணி நியமனம் செய்யக்கோரியும், அதுபோல் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு.
சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவரின் சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போராட்ட களத்தில் இறங்கியுள்ள மக்கள் நல பணி குழுவை தொண்டி மருத்துவ அதிகாரி இன்று அழைத்து பல்வேறு விஷயங்களை பேசினார் அதில்
கூடிய விரைவில் நிரந்தர மருத்துவர் பணி நியமனம் செய்வதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம் விரைவில் அதற்கான முடிவுகள் எட்டப்படும் என்றும் தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுடைய அடிப்படை அவசரம்கருதி தமிழக முதல்வர் இப்பகுதி மக்கள் அனுபவிக்கும் துயரங்களை களைவதற்கு விரைந்து செயல்பட்டு சாமானிய மக்களுடைய மருத்துவ சேவை கிடைத்திட பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 30 அன்று தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டத்தை நடத்துவதற்கு தொண்டி மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வந்துள்ளது.
எனவே போராட்டம் நடத்துவதற்கு முன்பாக தமிழக அரசு இது சம்பந்தமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் திராவிட மாடல் சிறப்படையும்....
செய்திகள் மக்கள்தொண்டன்
@ thondinews
வளர்ச்சியின் தேசம் இந்தியா தற்போது அழிந்து கொண்டிருக்கிறது
