மேட்டுப்பாளையத்தில் இளைஞரை நிர்வாணப்படுத்தி , துன்புறுத்திய மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்(SP) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில , மாவட்ட நிர்வாகிகள் மனு...
மேட்டுப்பாளையம் சேரன் நகர் 2 பகுதியை சேர்ந்தவர் தௌபீக் உமர் (21) . இவர் GH ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார் .
கடந்த 22.11.24 வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளரான குரு சந்திர வடிவேலு.SI அவருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வர சொன்னதன் அடிப்படையில் தௌபீக் உமர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் . எந்த ஒரு குற்ற வழக்கும் இல்லாத சூழ்நிலையில் , அவரை தனி அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி , மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளரான குரு சந்திர வடிவேல்.SI மற்றும் சில காவல் அதிகாரிகள் காலை 11 மணியிலிருந்து 12.30 மணி வரை பைப்பில் ஈர துணியை சுற்றி சரமாரியாக அடித்துள்ளனர் . அதன் பின் வீடு திரும்பிய தௌபீக் உமர் நடந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் உடல் முழுவதும் வலி தாங்க முடியாமல் அருகிலுள்ள மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்தார் .
24.11.24 தேதி சிறுநீரில் இரத்தம் கசிய ஆரம்பித்து , 26.11.24 தேதி வயிற்று வலி , இரு அல்லை பகுதியிலும் வலி அதிகரித்து , சிறுநீரில் அதிகமாக இரத்தம் கசிய ஆரம்பித்தது . உடனடியாக மேட்டுப்பாளையம் இந்துஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக KMCH அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதித்து பார்த்த மருத்துவர் உடலில் பலமாக அடித்த உள் காயங்கள் உள்ளது . பலமாக அடித்ததால் நரம்புகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இரண்டு சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார் . அதன் பின் தௌபீக் உமர் அவர்களிடம் விசாரித்தபோது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார் .
28.11.24 தேதி காவல் நிலைய உதவி ஆய்வாளராக குரு சந்திர வடிவேல் அவர்களைப் பார்த்து நியாயம் கேட்கவும் , அவர் மீது புகார் செய்யவும் தௌபீக் உமர் அவர்களின் தாயார் இரவு 9.30 மணி அளவில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் .
காவல் நிலையத்தில் அதிகாரி இல்லை எனவும் , சில அதிகாரிகள் புகாரை எடுக்க மறுத்துவிட்டனர் .
இது சம்பந்தமாக அவர்களது குடும்பத்தார்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார்கள்.
அதன் அடிப்படையில் உரிய சம்மன் இல்லாமல் தௌபீக் உமர் அவர்களை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து சரமாரியாக அடித்து இரண்டு சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழக்க காரணமாக இருந்த காவல் நிலைய உதவி ஆய்வாளராக குரு சந்திர வடிவேல்.SI மீதும் , மற்றும் அவரது தாயாரை மரியாதை குறைவாக நடத்திய மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி , பாதிக்கப்பட்ட சகோதரர் தௌபீக் அவர்களுடைய தாயார் மற்றும் குடும்பத்தார்களுடன் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் E. உம்மர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது .
கோவை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் SI. குரு சந்திர வடிவேல் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படும் காவல்துறை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அத்துமிரல்கள் ஈடுபட்டு வருவது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய திமுக தொடர்ந்து சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை செயல்பட விட்டு வேடிக்கை பார்ப்பது பாசிச பாஜக உடைய கொள்கையை அப்படியே திமுகவின் தமிழக அரசின் காவல்துறையும் செயல்படுத்தி வருவதாகவே கணிக்க முடிகிறது தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவலர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மக்களுக்கான நீதியை நிலைநாட்டிட வேண்டுகிறோம்...
அப்பொழுதுதான் திராவிட மாடலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டதாக அர்த்தமாகும்
தமிழக அரசு சார்பாக பாதிக்கப்பட்ட சகோதரருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
