சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு பெருந்தொகையை குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் பெற்றுக் கொண்டதாகவும் அதுபோல் பாதிக்கப்பட்ட உயிரிழந்த குடும்பத்தார்களிடமும் பெருந்தொகையை பெற்றுக்கொண்டு நியாயமாக விசாரிப்பதாகவும் கூறி இருதரப்பிலும் லஞ்சம் விளையாடி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடந்த18-10-2024 அன்று காவல் நிலையத்தில் இதுதொடர்பாக விளக்கம் கேட்டபோது உதவி ஆய்வாளர் விஷ்ணுமணி மற்றும் தலைமை காவலர் சரவணகுமார் ஆகியோர் நியாயம்கேட்டு சென்றவர்களை கடுமையாக தாக்கி, கொலையுண்டவரின் தாயாரையும் பெண் என்று பாராமல் பல் உடைமாளவிற்கு தாக்கியுள்ளார்கள்.
இது சம்பந்தமான காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்படடது. ஆனால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது தொண்டி காவல்துறை இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக நியாயம் கேட்டு களத்தில் இறங்கியாது SDPI, தவறு செய்த காவலர்கள் மீது உரிய குற்ற வழக்குகள் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது SDPI, இந்நிலையில் மாவட்ட காவல்துறை தவறுசெய்த காவலர்களை காப்பாற்றும் நோக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் போக்கை கடைபிடித்து வந்தது.
இதனைத் தொடர்ந்து 22-11-2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தொண்டி பாவோடி மைதானம் என்ற இடத்தில் எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பிரதிநிதி அப்துல் மஜித்,மீனவர் அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், முன்னாள் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஹனிப், முன்னாள் மண்டபம் மேற்கு ஒன்றிய தலைவர் சிராஜுதீன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இதன் பிறகும் மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட தலைநகரில் மக்கள்திரள் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டி வரும் என்பதை மாவட்ட மீனவர் அணி தலைவர் பகுதிஅவர்கள் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.
எஸ்டிபிஐ நடத்திய தொண்டி ஆர்ப்பாட்ட வீடியோ👇
