இந்த சுகாதார நிலையம் கடந்த காலங்களில் அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மகப்பேறு சிகிச்சை மற்றும் குழந்தைகள் தாய் சேய் நல பிரிவு சிறப்பாக செயல்பட்டு திருவாடானை தாலுகாவில் முதன்மை தாய் சேய் நலப்பிரிவாக அதிகமான பிரசவங்கள் பார்க்கப்பட்டு வந்தது.
. கடந்த காலங்களில் ஒரு பெண் மருத்துவர் உட்பட ஐந்து மருத்துவர்கள் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் சமீப காலமாக திமுக ஆட்சி அமைத்ததற்கு பிறகு இங்கே சிறப்பாக செயல்பட்டு வந்த தாய் சேய் நலப்பிரிவு முற்றிலும் முடக்கப்பட்டு பேரளவிற்கு செயல்பட்டு வருகிறது .
மேலும் இங்கே நிரந்தர மருத்துவர் இல்லாத ஒருஅவலநிலை தற்காலிக மருத்துவர்கள் வந்து செல்லும் அவல நிலையும் நிகழ்கிறது.
தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமானது 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட மருத்துவமனை தான் இன்றைக்கு தரம்தாழ்ந்து திட்டமிட்டு சில அரசியல் சதிகளால் தொண்டி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த பகுதிக்கு மருத்துவமனை அமையும் அத்தனை தகுதியும் இருந்தும் இங்கு சரியான தலைமை இல்லாததின் காரணத்தால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் இப்பகுதி மக்களை ஓட்டுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு மொத்தமாக வேட்டுவைத்து விட்டார்கள்.
சில சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஏற்படும் மருத்துவ அவலம் ஏழை எளிய பாட்டாளி விவசாய பெருமக்கள், சரியான மருத்துவம் கிடைக்காமல் அளக்களிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையை தொடர்ந்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
போதிய மருத்துவர் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவ சேவைகூட தற்போது திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள் பாதிக்கப்படும் பொதுமக்கள் .
சிறுபான்மை மக்கள், மீனவர்கள், தோட்டக்கார பகுதிகளில் வாழும் விவசாய பெருங்குடி மக்கள் பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காக அணுகக்கூடிய இந்த தொண்டி என்ற மையப்புள்ளி தொடர்ந்து அரசியல்வாதிகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள். இந்த அவலத்தை போக்க புதிய ஒரு முயற்சியை
தொண்டி மக்கள் நல பணி குழு என்ற பெயரில் துவங்கி அதன் பெயரிலே முதல் கட்டமாக தொண்டி பகுதிக்காண இந்த மருத்துவ சேவையை விரிவு படுத்த அரசைவலியுறுத்தி பல்வேறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். மேலும் முதல் கட்டமாக தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தேவையான உபகரணங்களையும் முறையாக செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்படி செய்யாத பட்சத்தில் வரும் காலங்களில் இது தொடர்பாக அரசை கண்டித்து வீரியமான போராட்டங்களை மக்களைதிரட்டி நடத்துவது என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி மக்கள் நல பணி குழு என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தலைமையில் 18 நவம்பர்2024 அன்று காலையில் தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை ஆய்வுசெய்த தொண்டி மக்கள் நலப்பணி குழு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது .
அதில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து 8 மருத்துவர்களையும் உடனே பணி அமர்த்த வேண்டும்,
தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கு பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு அமைப்புகள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது .
இதனடிப்படையில்
மேற்படி சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
நிரந்தர மருத்துவர் முதல் கட்டமாக உடனடியாக பணி அமர்த்த வேண்டும்..
மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும் வகையில் ஸ்கேன் எக்ஸ்ரே போன்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது இதை உடனடியாக சரி செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்..
ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த தாய் சேய் நலப் பிரிவு மீண்டும் பெண்மருவத்தூர் மூலம் முறையாக செயல்படுத்திட வேண்டும்.
ஏற்கனவே செயல்பட்டு வந்த தாய் சேய் நலப் பிரிவில் ஸ்கேன் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மீண்டும் செயல்படுத்திட வேண்டும்.
24 மணி நேர மருத்துவ சேவையை நிரந்தர மருத்துவர் கொண்டு மீண்டும் செயல்படுத்திட வேண்டும்.
என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தொண்டி நல பணி குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மேற்படி கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வீரியமிக்க மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்பது என தொண்டி மக்கள் நலப்பணி குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி@thondinews
தொண்டி சம்பந்தமான பல்வேறு செய்திகளை தகவல்களை அறிய நமது youtube சேனலை பின்பற்றுங்கள் ☝
