ஏனென்றால் எல்லா மருத்துவர்களையும் போன்று இவர் இல்லை மிக மோசமான நெருக்கடியான காலகட்டத்தில் இந்தப் ஊர் மக்களுக்காக மருத்துவ சேவையை கொடுத்த மனிதர் சிக்கன் குனியா டெங்கு, போன்ற மக்களை அச்சுறுத்தி வந்த நோய்களை இந்தப் பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான மருத்துவ நம்பிக்கையை ஏற்படுத்திய மனிதர் இவர், மேலும் கொரோனா காலத்தில் எந்த மருத்துவமனை கதவுகளும் திறக்கப்படாத சமயத்தில் தன்னுடைய நலனையும் பாராது இந்த ஊர் மக்களுக்காக மருத்துவ சேவை ஆற்றியவர், இரவு நேரங்கள் என்று கூற பாராமல் எந்த நேரத்திலும் மருத்துவ சேவை செய்த ஒரே மருத்துவர் இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இழப்பானது இந்த தகுதியின் மக்களை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. இவருடைய இறப்புச் செய்தி பள்ளிவாசலின் ஒளிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட அந்த சமயத்திலிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அவரை அவருடைய மரண செய்தி அறிந்து வந்து பார்த்து சென்று வருகிறார்கள். அவருடைய மகத்தான பணியை நன்றியோடு நினைவு கூறும் வகையிலேயே இந்த செய்தியை தொண்டி நியூஸ் வெளியிடுகிறது.
நன்றி அன்புடன் மக்கள் தொண்டன் பைய்ஸ்
