இது இப்படி இருக்க அரசியல்வாதிகள் அடிக்கடி மாநாடுகள் போடுகிறார்கள் என்றால் அவர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கும் அவர்களுடைய மிகப்பெரிய ஆளுமைகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் கண்டிப்பாக மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
அதுபோல் சில சமூக அமைப்புகள் போடக்கூடிய கூட்டக்கூடிய மாநாடுகள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த சமூகத்தின் ஒற்றுமையை பறைசாற்ற கூட்டப்படுகிறது. மேலும் அந்த சமூகத்துடைய பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்த கூட்டப்படுகிறது.
அரசியல்வாதிகளோ தங்களுடைய ஊழல் பணத்தின் மூலம் தங்களை தங்களுடைய வளர்ச்சிகளை நிலை நிறுத்திக் கொள்வது என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை என்பது போல.
இன்றைக்கு சில ஆன்மீக அமைப்புகள், அதிலும் குறிப்பாக வீண்விரயம் தேவையற்ற ஆடம்பரம், திருமணங்களில் அதிகப்படியான செலவினங்களை தடுப்பது, எளிமையான வாழ்க்கையை கடைபிடிப்பது, எந்த ஒரு நிலையிலும் செலவினங்களிலும் வரம்புமீறாமல் செயல்படுவது, தேவையற்ற செலவினங்களை குறைத்து பொதுப்பணத்தை பாதுகாத்து அதை பயனுள்ள வகையில் ஏழை எளிய மக்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக செலவிட கற்றுக் கொடுத்த பொருளாதார சமூக சீர்திருத்தத்தை முழு உலகிற்கும் 1450 ஆண்டுகளுக்கு முன்னால் நிலைநாட்டிவிட்டு சென்ற ஆட்சியாளர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களுடைய வழியை பின்பற்றுகிறோம் நாங்கள் என்று சொல்லக்கூடிய ஆன்மீக அமைப்புகளே! இது போன்ற மாநாடுகளை அடிக்கடி நடத்தி பல கோடிகளை வீண்விரயம் செய்து அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சி அவர்களுடைய வீண் விரயத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பொருளாதாரத்தை கட்டவுட் களுக்கும் பேனர்களுக்கும் பிளக்ஸ் போர்டுகளுக்கும் மாநாடுகள் நடத்துவதற்கும் பல கோடிகளை நாசமாக்க கூடிய சூழலை கண்கூடாக பார்க்கும் பொழுது எளிமையின் பெயரால் இஸ்லாத்தை சொல்லும் முகமது நபியின் மார்க்கத்தில் இப்படிப்பட்ட வழிகேடுகள் இஸ்லாத்தின் பார்வையில் ஏற்புடையது தானா...
உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுவதற்காக ஹஜ் என்ற கடமையைத் தவிர வேறு எந்த மாநாட்டையும் முகமது நபி நடத்தவில்லை. நீங்கள் நடத்தும் மாநாட்டின்
இந்தப் பொருளாதாரங்களை எத்தனை ஏழை எளிய பாட்டாளி மக்களுடைய வளர்ச்சிக்கு, அல்லது தீராத நோயிலும் கடன் தொல்லையிலும் தத்தளிக்கும் மக்களுடைய நிவாரணத்திற்கு, அல்லது பயனுள்ள நிலையான தர்மத்தை வலியுறுத்தும் கல்விக் கூடங்களை உருவாக்குவதற்கு இந்தப் பொருளாதாரங்களை செலவிட்டிருந்தால் இந்நேரம் இந்த சமூகம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்க முடியும்,
இவர்களுடைய வளர்ச்சிக்காக இந்த சமூகத்தின் பொருளாதாரம் இப்படி வீணடிக்கப்படுவது சரிதானா சிந்திப்பீர்.....
தொடர்ந்து இந்த சமூகத்துடைய இன அழிப்பிற்காக பல்வேறு சதிகளை எதிரிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சமூகத்திற்கு எதிராக பின்னப்படும் பல்வேறு சதி வேலை முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக திரைத்துறை பயங்கரவாதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, நமக்கான ஒரு பொது ஊடகத்தை உருவாக்க வீணடிக்கப்படும் இந்த கோடிகளால் உருவாக்க முடியாதா?
By" மக்கள்தொண்டன் faiz" thondi
