தற்போது நிரந்தர மருத்துவர்கள் நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று தெரிவுவந்தையடுத்து
திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்ட போராட்டம் தொண்டியில் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்பதை மக்கள் நலபணிகுழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போராட்டக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில்
தொண்டி மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர பணிமருத்துவர்களை நியமிக்க கோரியும்,
தொண்டி மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாம தரம் உயர்த்தக்கோரியும். காத்திருப்பு போராட்டம்* நடத்த நாம் வால்போஸ்ட்டர் மற்றும் வளைதளத்தில் பதிவேற்றம் செய்தததை தொடர்ந்து. சுகாதாரத்துறை துணை இயக்குனர் இராமநாதபுரம் அவர்களின் அழைப்பின் பெயரில் சென்று சந்தித்தோம்.
அதில் அரசின் சுகாதார துறையால் நமக்கான மருத்துவ தேவையை தற்போது முழுமையாக வழங்க வாய்ப்பில்லை என்பது திட்டவட்டமாக தெரியவந்தது
இராமநாதபுரம் மாவட்டம் முழுவது சரிபாதி மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அனைத்து மருத்துவமனைகளிலுமே மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்றும். உங்கள் ஊருக்கான மருத்துவர்களை வேறு ஊர்களில் இருந்து அனுப்பினால் அங்கே மருத்துவர் இல்லாத நிலை ஏற்ப்படும்... ஆகவே மருத்துவ காலிப்பணியிடங்கள் அரசால் நிரப்பபடும் வரை தங்களின் ஊருக்கு நிரந்தர பணி மருத்துவரை பணியமர்த்த வாய்ப்பில்லை என்று கூறினார்.
அரசியல் அழுத்தமின்றி அரசுத்துறையால் நமக்கான மருத்துவ சேவைகிடைக்க வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
நமக்கான மருத்துவ சேவையை பெற தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களாகிய நாம் வீதிக்கு வந்து போராட வேண்டிய கட்டாய தேவைக்கு அரசு நம்மை கொண்டு வந்துவிட்டது தொடர்ந்து தொண்டி பேரூராட்சி பகுதி திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகிவருகிறது வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
ஒரு பேரூராட்சிக்கு மருத்துவமனை இருந்தும் அது தற்போது இல்லை என்பதும். அதேசமயம் ஒரு ஊராட்சி பகுதிக்கு மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதும் அரசியல்வாதிகள் எங்கள் பகுதியை வஞ்சித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து ஆட்சியாளர்கள் எங்கள் பகுதியை புறக்கணித்து வரும் இந்த நிலையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இதற்கான போராட்ட முன்வடிவத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் எனவே தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி இந்தப் போராட்டத்தை எத்தனை தடங்கள் வந்தாலும் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை எக்காரணத்தை முன்னிட்டும் இந்தப் போராட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது. என்று அந்தக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் என பல்வேறு மக்களும் இந்த குழுமத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியிலே சென்றடையும் என்பதில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
@thondinews
