இந்நிலையில். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை தரம் குறைக்கப்பட்டு சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது..
இந்நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஏராளமான மருத்துவ உபகரணங்கள் இருந்தது அது பயன்பாடு இன்றி அதற்கான பணியாளர்கள் இல்லாமல் துருப்பிடித்து செயலிழந்துபோய் உள்ளது..
இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு ஐந்து மருத்துவர்கள் இருக்க வேண்டிய சூழலில் ஒரு நிரந்தர மருத்துவர் கூட இல்லாத அவல நிலை தற்போது தொடர்கிறது திமுக பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்தோடிய நிலையில் இந்த மருத்துவமனை சம்பந்தமான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை முன்பிருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த அத்தனை திட்டங்களும் இங்கு முடக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தப் பகுதி மக்கள் திமுகவின் கூட்டணிக்கு வாக்களித்ததற்கு நன்றி கடனாகத்தான் இதையெல்லாம் ஆளும்அரசு செய்து கொண்டிருக்கிறது என்று மிகுந்த வேதனையிலும் கோவத்திலும் மக்கள் கொப்பளிக்கும் வார்த்தைகளை இங்கே பதிவிட முடியாது இந்தப் பகுதியில் 3 4 தலைமுறைகளாக வெற்றி பெற்று தொடர்ந்து இந்த பகுதி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளின் கையாலாகாத தனத்தால் தற்போது எங்களுடைய பகுதி முற்றிலும் நாசமாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் பொதுமக்கள்.
இதனைத் தொடர்ந்து பகுதியில் அடிப்படை மருத்துவத்தை அமைத்து தராத விடியல் திமுக அரசை கண்டித்து இந்தப் பகுதி பொது மக்களின் சார்பாக டிசம்பர்30 தேதியன்று மாபெரும் காத்திருப்பு போராட்டம் கோரிக்கை நிறைவேறும்வரை நடத்தப் போவதாக பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதில் ஆளும் ஆட்சியாளர்கள் தவிர்த்து அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதியின் வியாபாரிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் கடையடைப்பு ஆதரவு போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளனர்
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள வர்த்தக சங்கம், கூறியுள்ளதாவது இந்தப் பகுதி மக்களுடைய மருத்துவ தேவையை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..
நன்றி @thondinews
