ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் திருவிழா மற்றும் விழா காலங்ளில் ராட்டினம் அமைத்து தொழில் செய்யும் வியாபாரி ஒருவரை பட்டப் பகலில் கூலிப்படை வெட்டிக்கொலை செய்துள்ளது.
இது முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பு தொண்டியில் பிஸ்மி ஹோட்டல் அருகில் இவர் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த கும்பல் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் தான் சுமார் 2:30மணி அளவில் இந்தப் படுகொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது..
சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

