மதுரை, அக்.27- முதல் மனைவி இருக்கும் போது 2-வதாகதிருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
*C.M.P.(MD)No.11579 of 2023*
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரபி அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-எனக்கும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாங்கள் இருவரும் டாக்டர்களாக பணி யாற்றி வருகிறோம். இந்த நிலையில் என் மனைவி குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் என் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, நான் என் முதல் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ. 25 ஆயிரமும் வழங்கும்படி கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.*
*இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.*
*அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஒரு அரசு டாக்டர். அவர் எந்தவிதமான குடும்ப வன்முறையிலும் ஈடுபடவில்லை என வாதாடினார்.*
*2-வது திருமணம் குற்றம் விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரர் முதல் மனைவி இருக்கும்போது 2-வதாக திருமணம் செய்துள்ளார். ஒரு இந்து அல்லது கிறிஸ்தவர், பார்சி, யூத மதத்தை சேர்ந்த கணவன், முதல் மனைவிஇருக்கும்போது 2-வதாக திருமணம் செய்துகொண்டால் அது குற்றமாக அமைவதுடன், கொடுமை இந்த நடைமுறை முஸ்லிம்களுக்கு பொருந்துமா என்றால் 'ஆம்' என்பது தான் பதில்.மனுதாரர் தனது முதல் மனைவியி டம் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிந்ததற்கான சான்றிதழை ஷரியத் கவுன்சில் வழங்கியதாக கூறுகிறார். ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். கோர்ட்டு கிடையாது.எனவே மனுதாரர் தனது மனைவி உடனான திருமண பந்தத்தை முறிக்க அதிகாரப்பூர்வமான கோர்ட்டில் இருந்து உத்தரவை பெற தவறி விட்டார். எனவே இவர்களின் திருமண பந்தம் தொடர்கிறது.*
*மனுதாரரின் 2-வது திருமணம், முதல் மனைவிக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு கொடூரமான செயலாகும். இதற்காக ரூ.5 லட்சம் இழப் பீட்டை கீழ்கோர்ட்டு விதித்தது நியாயமானது. இந்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.*
விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை வளர்க்க உதவும்......
விருப்பமில்லாத வாழ்க்கையால் குற்றங்கள் பெருக வாய்ப்பு உள்ளது...
நீதிபதிகள் மனிதர்கள் தான் இறை சட்டத்திற்கு எதிரான எந்த தீர்ப்பும்... மனித குலத்தை சீர்படுத்த முடியாது.....
சமீப காலமாகவே நீதித்துறை விசித்திரமான தீர்ப்புகளை வழங்கி மக்களின் அவநம்பிக்கையை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விபச்சார குற்றங்களை பெருகுவதற்கு நீதி துறையின் இது போன்ற பல தீர்ப்புகள் தொடர்ந்து காரணமாகஉள்ளது.
அதன் வரிசையில் இந்த தீர்ப்பையும் எடுத்துக் கொள்ளலாம்..
பெண் சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான பல தீர்ப்புகளை தொடர்ந்து இதுபோன்று தற்போதைய ஆட்சியாளர்களில் பார்க்கமுடிவது உள்ளபடி சிறுபான்மை மக்களை கவலையும் கொள்ள செய்துள்ளது. தொடர்ந்து முஸ்லிம்களின் மத உரிமைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம்களுக்கு வழங்கிய மத சுதந்திரத்தில் கை வைப்பதாகவே முஸ்லிம்கள் கருதுகிறார்கள்....
