நாட்டின் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்று பத்தாண்டு காலத்தில் முற்றிலும் துடைத்த எறியப்பட்டு தனியார் முதலாளிகளுக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது என்ற பகிரங்க குற்றச்சாட்டு 🇮🇳 தேசபக்தர்களால் முன்வைக்கப்படும் நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நிறுவனங்கள் அரசு சார்புடையதாக செயல்பட்டு வரும் வரிசையில் BSNL கடந்த காலங்களில் ஊழியர்களின்பல்வேறு முயற்சியால் அழைக்கட்டுரை தரம் உயர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்த்து வந்த நிலையில். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் செயல்பட்டு வந்த BSNL பவர் ஸ்டேஷன் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேற்படி BSNL நிர்வாகம் தனியார் நிறுவனத்துக்கு வாடகை செலுத்தாத்தாத்தின் காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இழுத்துமூடப்பட்டு அனைத்துப் பொருள்களும் ஜப்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்கு செயல்பட்டு வந்த அலைபேசி கோபுரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால் தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாகியும் BSNL என் செயல்படாததால் இந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் பெருமளவு தன்னுடைய எண்ணை தனியார் தொலைபேசி எண்ணிற்கு மாற்றி வருகிறார்கள்.
இதனால் அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவாக BSNL நிர்வாக செயல்பாடு மாறியுள்ளது.
ஒரு பக்கம் அரசே திட்டமிட்டு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்த்துவரும் நிலையில் மிக முக்கியமான சேவையாற்றி வந்த BSNL லும் தற்போது தடம் தெரியாமல் அழிந்து வருவது கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது.
மாற்றம் வருமா ! மக்கள் தேற்றம் பெறுவார்களா!!! பொறுத்திருந்து பார்ப்போம் ✍️
Subscribe
