திருப்பூர் பாண்டியன் நகரில் பாஜகவை சார்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மூன்று பேர் பலி
நேற்றைய தினம் RSS பேரணி தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற முடிந்த நிலையில்; இப்படி ஒரு சம்பவம் இன்று திருப்பூரில் நடைபெற்று இருக்கிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் சதிச்செயல் உள்ளதா என்பதை தமிழக காவல்துறை தீர விசாரிக்க வேண்டும்.
திருப்பூரில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து குழந்தை பெண் உட்பட 3 பேர் பலி.இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டில் வெடிப்பொருட்கள் வைத்து பல்வேறு ஊர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
காவல்துறை உளவுத்துறைகளுக்கு இந்தச் சம்பவம் தெரியாதா?இல்லை பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பதினால் மெத்தன போக்கா?
மூன்று உயிர்கள் பலியாகியும்,பலரும் காயங்களோடு உள்ள நிலையில், 10 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தும் இன்னும் NIA , போன்ற உளவு அமைப்புகள் விசாரணை போன்ற நடவடிக்கைகள் இன்னும் துவங்கவில்லை.
காரணம் கார்த்திக் என்பதாலா இதே முஸ்லிம்கள் என்றால் இதே நேரத்தில் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று பல்வேறு கதைகளை கட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றப்பரம்பரைக்கு சொந்தக்காரர்களாக ஆக்கி இருப்பார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் தொடர்ந்து வெடிப்பொருட்கள் தயாரிக்கக்கூடிய பணிகளும்,
தயாரித்த பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடிய நிலை தொடர்ந்து நடந்து வருகின்றது இதனை கண்டு கொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இந்த விபத்தில் இறந்த குடும்பங்களுக்கு ரூபாய் 15 இலட்சம் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை எனில் SDPI கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம். என்று திருப்பூர் தெற்கு மாவட்ட SDPI கட்சித் தலைவர் ஹரிஷ் பாபு தெரிவித்தார்.
