மிக குறைவான மக்கள் தொகை கொண்ட அன்றைய காலகட்டத்திலேயே அரசு மருத்துவமனையாக செயல்பட்டு இருந்த தொண்டி அரசு சுகாதார நிலையம் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய சிகிச்சை மருத்துவத்திற்கான தேவை அதிகம் உள்ள நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி காலத்தில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம்உயர்த்தப்பட்டது.
திருவாடானை தாலுகாவில் அதிக மானபிரசவங்கள் நடைபெற்று வந்த தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக இந்தப் பகுதி மக்களின் அவதியை அதிகப்படுத்துவதற்காகவும் திட்டமிடப்பட்டு இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் பணிகள் முடக்கப்பட்டது. குறைந்தது ஒரு பெண் மருத்துவர் உட்பட ஐந்து மருத்துவர்கள் இருக்க வேண்டிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் வெறுமனே ஒரே ஒரு மருத்துவரை வைத்து காலை நேரத்தில் மட்டும் மருத்துவம் வெளி நோயாளிகள் பிரிவில் கொடுக்கப்பட்டு அத்தோடு மருத்துவமனை இழுத்து மூடப்படுகிறது.
பல்வேறு விபத்துக்கள் அவசர உதவிகளுக்கும் அவசர சிகிச்சைக்காக டெலிவரியின் போது வரக்கூடிய தாய் சேய் உயிர் காக்கும் திட்டத்திற்கும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படாத நிலையில் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல்வாதிகளோ தொடர்ந்து ஓட்டுக்காக மட்டுமே இந்த பகுதி மக்களை பயன்படுத்தி வருகிறார்கள். தொண்டி உட்பட சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய சாமானிய ஏழை எளிய பாட்டாளி மக்கள் மருத்துவம் கிடைக்காமல் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழலும் இடையிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய துயரங்களுக்கு ஆளாகும் சூழலும் தொடர்கிறது.
பொதுவாக ஆட்சி மாற்றம் வந்தால் ஏதாவது ஒரு நல்லது நடக்குமே என்று எதிர்பார்த்து பொதுமக்கள் ஒரு மாற்றம் வேண்டி வாக்களித்தார்கள் ஆனால் மாற்றம் ஏமாற்றமாக மாறியது.
உள்ளதும் போச்சு நொள்ளகண்ணா என்பது போல கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் பிரசவாடில் அறுவை சிகிச்சை உட்பட செயல்பட்டு வந்த நிலையில் மகப்பேறு சிகிச்சைக்கான அடிப்படை மருத்துவ வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பிரசவங்கள் நடப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர்27 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்த முக்கிய அமைச்சர் பல்வேறு மாவட்டங்களை கடந்து இராமநாதபுரம் மாவட்டம் வரும் வழியில் எஸ் பி பட்டினத்தில் ஒரு முக்கிய விருந்தினரை சந்தித்து விட்டு தொண்டி பகுதியை கடந்து செல்கிறார் அவர் சம்பந்தப்பட்ட கல்வித்துறையில் பல்வேறு தேவைகள் உள்ளது தொண்டி பகுதிக்கு ஆனால் நிலவரம் தெரிந்த அவர் இந்த பகுதியில் நிறுத்தவில்லை மக்களின் குறைகளை கேட்க அவர் தயாரில்லை இதுதான் தற்போதைய அரசியல்வாதிகளின்மக்கள் பணியாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சை கிடைக்காமல் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகும் மக்களைப் பற்றி சிந்திக்க தயாரில்லை
இதனால் ஏராளமான மக்களுக்கு குறிப்பாக பிரசவிக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய துயரங்களும் துன்பங்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாமானிய மக்களின் வலியையும் அவர்களுடைய அவதியையும் உணராத ஆட்சியாளர்கள் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய சூழலில்தான் மக்களை ஏமாற்றும் சில சமூக அரசியல் அமைப்புகளும் அவர்களுடைய கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக அரசியலுக்காக வால்போஸ்டர்கள் மூலம் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்..
அவர்கள் முன்னின்று வாக்கு கேட்டு தேர்வு செய்வதற்காக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடிசெய்த இந்தசமூக அரசியல் அமைப்புகள் அவர்கள் தேர்வு செய்த உறுப்பினர்கள்தான் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்.
சொல்லப்போனால் அவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடிய அளவிற்கு உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்தப் பகுதியில் Mp, mla வாக இருக்கும் நிலையில் இந்தப் பகுதியுடைய அடிப்படை தேவைகள் எதையுமே செய்து கொடுக்க திராணியற்ற மோசடி கும்பல்கள் தான் இன்றைக்கு சாமானிய மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து துன்பங்களை துயரங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் வரும் காலங்களில் சாமானிய மக்களுடைய அடிப்படை உரிமைகளை பறித்த இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கொந்தளிப்போடு கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாற்றம் வருமா மக்கள் தேற்றம் பெறுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்....
அதற்கு இடையில் எத்தனைதுன்பங்களை இந்த மக்கள் அனுபவிக்கப் போகிறார்களோ தெரியவில்லை...
அன்புடன் @thondinews.
