ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் செயல்பட்டு வரும் BSNL அலுவலகமானது. 15 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை பாக்கி கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது இந்நிலையில் நீண்ட காலம் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தை காலி செய்து கொடுக்குமாறும் வாடகை பாக்கியை கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்ற பணியாளர்கள் மூலம் அலுவலகதின் அனைத்து பொருள்களும் ஜப்தி செய்யப்பட்டு அலுவலகம் எடுத்து மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொலைதொடர்பு கோபுரத்திற்கு வரும் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்களாக பகுதியில் BSNL இணைப்புகள் செயல்படாமல் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முக்கிய அரசு அலுவலகங்கள் மின்வாரியம் தபால் அலுவலகம் உட்பட பல்வேறு இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது..
மேலும் BSNL கைபேசி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு உட்பட பல்வேறு முன்பதிவுகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
அரசும் BSNL நிர்வாகமும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
