ஜமாத் உடைய பல்வேறு நிலங்களை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து அது முற்றிலும் ஜமாத்துக்கு வருவாயை அதிகப்படுத்தி தரும் வகையில் வணிக வளாகங்கள் பல்வேறு மக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய கட்டிடங்களை கட்டுவதற்கு சிறந்த முறையில் முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார். அவருடைய காலா கட்டத்திற்குப் பிறகு வந்த ஜமாத் நிர்வாகிகள் இதுபோன்ற ஒரு திட்டத்தை யாவது அமல்படுத்தினார்களா அல்லது அதற்கான முனைப்பு காட்டினார்களா என்று பார்த்தால் கடந்த 10 ஆண்டு காலங்களில் இதுவரை ஒரு துரும்பை கூட்ட நகற்றியதாக தெரியவில்லை மாறாக வசதி படைத்த மக்களுக்கு தங்களுடைய கார்களை நிறுத்திக்கொள்ள ஜமாத் இணையத்தை கொடுப்பதற்கு முயற்சி நடந்து பல்வேறு எதிர்ப்புகளால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்படி தற்போதைய நிர்வாகம் கார் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட அந்த இடமும் மக்களின் மிகப்பெரிய உயிர் காக்கும் உயர்தர multispecial Hospital அனைத்து வசதிகளோடு கூடிய மருத்துவமனை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம்.
இந்த மருத்துவமனை திட்டம் நிறைவேறி இருந்தால் இன்றைக்கு ஏராளமான ஏழை எளிய பாட்டாளி சாமானிய மக்கள் இந்த மருத்துவமனையின் மூலம் மிகப் பெரிய பயனை பெற்றிருப்பார்கள். ஆனால் சில குறுகிய நோக்கம் கொண்ட சுயநலவாதிகளின் சுயநலத்திற்காக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இன்று இதற்கான முயற்சியை மேற்கொள்வதற்காக அரும்பாடு பட்ட சில சகோதரர்கள் கூட தங்களுக்கு ஏற்பட்ட முயற்சியின் தோல்வியால் ஒதுங்கிக் கொண்டார்கள்..
இதற்கான விதையை தூய முன்னாள் ஜமாத் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரியாதைக்குரிய ஜலால் அவர்கள் காலமாகி மூன்று ஆண்டுகளைக் கடந்து செல்லும் நிலையில்கூட மிகப்பெரிய முயற்சிக்கு விதைபோட்ட அந்த மனிதரின் நல்ல நோக்கமும் நன்மையான அந்த திட்டமும் நிறைவேற இந்த சமூகத்திற்கு நல்ல தலைமைகள் கிடைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் இந்தப் பகுதி மக்களின் மருத்துவ துயர் துடைக்கப்படும்.
பொறுத்திருந்து பார்ப்போம் வக்பு சொத்துக்கள் எல்லாம் குறிப்பிட்ட சில பணம் முதலைகளுக்கு தாரை வாத்து வரும் நிலையில் சாமானிய மக்கள் பயன்பெறும் இதுபோன்ற மருத்துவ திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஒருபுறம் வேதனை அளித்தாலும் இறைவன் நாடினால் நல்லவர்கள் தலைமையேற்றாள் மக்களுக்கு நன்மை நடக்கும் என்று நம்புவோம்...
நன்றி: மக்கள் தொண்டன்..
