சமீபகாலமாக மதுவினால் மிகப்பெரிய துயர சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக மது இருக்கிறது என்றால் அது யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அப்படிப்பட்ட மது சமீபகாலமாக பல்வேறு வடிவத்தில் இளைஞர்கள் மத்தியிலே அதிகரித்து வருவதைகாண முடிகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள் ஆனால் இளைஞர்களோ மதுவின் கையில் மாட்டிக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்திலேயே முடித்துக் கொள்கிறார்கள்.
இதனால் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தார்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டு செல்லக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் பெருமளவு காண முடிகிறது.
தற்போது பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பிலும் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தி வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் முதுகெலும்பு ஊனமாக்கப்படும் நிலை உருவாகி விடும்
எனவேதான் சமூக நலனில் தேச நளனில் அக்கறை கொண்டு JAQH ஜமாத் தொண்டி கிளையின் சார்பில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் வரிசையில் தொண்டியிலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் அலைபேசிகள் ஏற்படுத்தும் விளைவுகள் செல்போன் பயன்படுத்துவது பற்றியான விழிப்புணர்வு கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் , ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிரான பிரசுரங்கள் பொதுமக்கள் மத்தியிலே வழங்கப்பட்டது.
இதில் தொண்டி JAQJ தவ்ஹீத் மர்கஸ் தலைவர் அகமது பாய்ஸ், மௌலவி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
@thondinews
