நாகரிகம் என்ற போர்வையில் மக்கள் சூடான பொருள்களை பிளாஸ்டிக் பொருட்களில் வாங்கி பயன்படுத்துவதும் புற்றுநோயை பெருமளவு உருவாக்குகிறது. அதிகமான புற்று நோய்களின் உருவாக்கத்திற்கு காரணமாக தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு கூறப்படுகிறது. சூடான பொருள்களை எக்காரணத்தைக் கொண்டும் பிளாஸ்டிக் பொருள்களில் வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நாகரிகம் என்ற போர்வையில் நாம் அன்றாடம் சாப்பிடும் பிரியாணி வகை பார்சல்கள் தற்போது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு அதை விற்பனைக்காக உணவக உரிமையாளர்கள் பொதுமக்களிடம் கொடுக்கிறார்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் இதையும் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவது ஆபத்தானது.
எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களில் சூடான பணங்களை, அல்லது திடமான உணவுகளை அடைத்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதை விற்பனையாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் இது போன்ற ஆபத்தான விளைவுகளை செய்ய வேண்டாம். இதன் மூலம் புற்றுநோய் பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரியாணி போன்ற உணவுப் பொருள்கள் பெரும்பாலும் அலுமினியம் கண்டனர் போன்ற டப்பாக்களில் அடைத்து கொடுப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது நாகரிகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொடுக்கும் பழக்கம் உருவாகி வருகிறது. இது மிகப்பெரிய ஆபத்தானதாக பார்க்கப்படும் நிலையில் சூடான பொருள்களை அலுமினியம் கண்டெய்னர் மற்றும் பேப்பர்கள் மூலமாகவே பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். அலுமினியம் பயன்பாடு என்பது உடலுக்கு மோசமான எந்த பாதிப்பும் வராது..
அதே நேரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ரத்தத்தில் கலக்கசெய்து அதை புற்றுநோய் செயல்கள் உற்பத்தி செய்வதற்கு இலகுவாக அமைந்து விடுகிறது.
புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பொருள் குறிப்பாக சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பொருள்களில் பயன்படுத்துவதை வியாபாரிகளும் பொதுமக்களும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதுவே வளரும் சமூகத்தை பாதுகாக்கும்.
மக்கள் நலன்கருதி @thondinews,
