அதன் அடிப்படையில் முத்தலாக் தடை சட்டம், பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமாக அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தி வரும் சரியத் சட்டம் போன்றவற்றை பறிக்கும் சட்டங்கள் என பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தின் அடையாளம் பண்பாடு கலாச்சாரங்களை அழிக்கும் வேலையை மதவாத பாசிச பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஒரு பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்த வேண்டும் அதன் மூலம் வாக்குகளை பெற்று நிரந்தரமாக அரசியலில் பயணிக்க வேண்டும். ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து தனக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டை நாட்டின் வளர்ச்சியை முற்றிலும் அடகு வைத்து இந்தியாவில் வாழும் பெரும்பான்மை நடுத்தர சாமானிய பாட்டாளி மக்களின் உரிமைகளை பறித்து அவர்களை கொத்தடிமைகளாக வழிநடத்தும் திட்டங்களை இந்துத்துவ அரசியல் என்ற போர்வையில் பாஜக மதவெறி அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தற்போது இந்தியாவில் 800 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய அதனை நீண்ட காலம் ஆட்சி செய்து வழிநடத்திய முஸ்லிம்களுடைய வக்பு சொத்துக்களை அதாவது முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் ஆன்மீகப் பணிக்காகவும் முஸ்லிம்களால் தானமாக வழங்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அபாகரிக்கும் நோக்கோடும் வக்பு சொத்துக்களை பணக்கார கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அபகரித்துக் கொடுக்கும் நோக்கோடும் இஸ்லாமியர்களின் வக்கு போர்டு சட்டத்தில் சில திருத்தங்களை செய்கிறோம் என்ற போர்வையில் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கும் வேலையை மத்திய பாஜக அரசு இந்த சட்டத்தின் மூலம் கையாண்டு வருகிறது.
இந்த சட்டத்தை தனிச்சட்டம் இயற்றி அமல் படுத்துவதற்காக கடும் முயற்சி எடுத்து வரும் இந்த வேலையில். முஸ்லிம் முன்னோர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக நல்ல நோக்கத்திற்காக தானமாக கொடுக்கப்பட்ட வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் வக்பு சட்டத்தை பாசிச பாஜகஅரசு மாற்றி அமைக்க கொண்டுவந்துள்ள வகுப்பு திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களுடைய வாக்குகளை
( எதிர்ப்புகளை ) பின்வரும் பார்கோடு ஸ்கேன் செய்து அதில் கிடைக்கும் மின்னஞ்சலுக்கு (email sent )அனுப்புங்கள் இதன் மூலம் நம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்ய முடியும்.
