ஆகஸ்ட் 28, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்கு வரவேண்டிய காவிரி கூட்டு குடிநீர் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பராமரிப்பு என்ற பெயரில் நிறுத்தப்பட்டது .
இந்நிலை நேற்றைய தினம் சரி செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில் மீண்டும் கூட்டுக் குடிநீருக்கு வரும் குழாய் கல்லல் அருகே உடைப்பு ஏற்பட்டு மீண்டும் காவிரி கூட்டுக் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு தொண்டி பேரூராட்சியில் 15 நாட்களைக் கடந்தும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்..
ஆட்சி இருக்கும் அதிகாரிகள் செய்யும் தொடர் ஊழல் நடவடிக்கையால் தரமற்ற பொருள்களின் கொள்முதல் மற்றும் மக்கள் மீது அக்கறை இல்லாத செயல்பாடு இது போன்ற நிலைகள் தொடர்வதற்கு காரணமாக உள்ளது..
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் ஊழல்கள் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து தடைபட்டு உள்ளதால் 15 நாட்களுக்கு மேலாகி குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளார்கள் மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் தேவையற்ற போராட்டங்களை தவிர்க்க முடியும்.
