தமிழகத்தை பொறுத்தவரை பெண்களுக்கான உரிமைகள் எந்த வகையிலும் குறைவதில்லை கடந்த ஆட்சி காலத்திலும் சரி தற்போதைய ஆட்சியிலும் சரி உள்ளாட்சி பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும் கட்டாயம் 30 சதவீதத்துக்குமேல் பெண்கள் பிரதிநிதித்துவம் பல்வேறு துறைகளில் பின்பற்றி ஆக வேண்டும் என்ற கட்டாயமும் தமிழகத்தில் விதி ஆக்கப்பட்டுள்ளது.
ஆண் உரிமைகளை பறிக்கும் சீர்திருத்தம் சமூகத் தீமைகளுக்கு வழி வகுக்கும்
இதற்கு புதிதாக திராவிட மாடல் என்று பெயர் சூட்டப்பட்டாலும். ஒரு வகையில் கடுமையாக இதனால் ஆண்களுடைய பிரதிநிதித்துவ உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது ஒரு சில பகுதிகளில் நிர்வாக திறமையற்ற பெண்கள் இருந்தாலும் அவர்களை வெறுமண பொம்மையை போன்று செயல்படுத்தி பின்னே இருந்து இயக்கக்கூடிய தன் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
உள்ளாட்சிப் பிரதிநிதித்துவ சட்டத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே நிலையில் அந்தப் பதவியில் பெண்கள் தான் முறையாக செயல்படுகிறார்களா என்று பார்த்தால் 80% சதவீதத்துக்கு மேல் உள்ள பகுதிகளில் பெண்களை இயக்கக் கூடியது அவர்களுடைய குடும்பத்தார்கள் தான் இதனாலேயே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நாசமாக்கப்படுவதோடு திறமையாக செயல்படக்கூடிய ஆண்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகிறது.
பெண்ணுரிமை பறிக்கப்படுகிறது என்று பேசும் திராவிட போலி மாடல் அவர்களுடைய உயர்பதவிகளில் அவர்களுடைய பெண்களை அனுப்புவதில்லை. மாறாக திராவிடம் பேசும் போலிகள் அவர்கள் இருக்கும் பதவியை பெண்களுக்கு விட்டு கொடுப்பதும் இல்லை இப்படி தனக்கு என்றால் அது வேற வாய் மற்றவர்களுக்கு என்றால் அது நாற வாய் என்பது போல பெண்ணுரிமை பேசும் திராவிட மாடல் இவ்வாறு தான் உள்ளது.
சமீபத்திய கல்வி வளர்ச்சி சம்பந்தமான தமிழக அரசின் கொள்கை திட்டத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு பதவிகளில் பெண்களுக்கு தான் முன்னுரிமை என்ற போர்வையில் 70% பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெண்கள் தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. தலைவர் மட்டும் உதவித்தலைவர்கள் என்று முக்கிய பொறுப்புகளுக்கு பெண்களுக்கே முக்கியத்துவம் என்ற அடிப்படையில் தேர்வுகள் நடப்புத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை பள்ளி வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நாசமாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்த முடியாத சில பெண்களுக்கு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்படும் ஆண்களுடைய உரிமையை பறித்து அதை பெண்களுக்கு கொடுத்து பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கமும் திட்டமும் நாசமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் தற்போதைய திராவிட மாடலின் மிக மோசமான நடவடிக்கையாக உள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் வந்து கலந்து கொண்டு செயல்படுவதில் என்ற மாற்று கருத்தும் இல்லை ஆனால் பெண்களுக்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து நிர்வாகங்களில் பெண்கள் நுழைக்கப்பட்டு கட்டாயமாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு அந்த பொறுக்குகள் வீணடிக்கப்படுவது உண்மையிலேயே மிகவும் மோசமான பிற்போக்குத்தனமான திராவிட மாடலாகவே கருத வேண்டும்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்தும் அரசின் இது போன்ற மோசமான செயல்திட்டங்களால் சிறப்பாக செயலாற்றும் ஆண்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதோடு பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பான செயல்பாடும் நாசமாக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த ஐயமும் இல்லை அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி தகுதி இல்லாத செயலாற்ற முடியாத பெண்களை பணி அமைத்து அவர்களுக்குப் பின்னால் பல அரசியல்வாதிகள் இருந்து காய் நகர்த்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் அரசு மிக மோசமாக தனது பிற்போக்குத்தனமான சிந்தனையை செயல்படுத்துவதாகவே பொதுமக்கள் கருத வேண்டி உள்ளது.
சீர்திருத்தம் என்ற பெயரில்
நிர்வாக சீரழிவுகளை ஏற்படுத்தும் இது போன்ற போக்கை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
By' @thondinews
