ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் வினியோகம் முறைகேடுகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று. வருகிறது.
பராமரிப்பு பழுது நீக்கம் என்ற பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் மக்களின் வரிபணங்கள் தரமற்ற பொருள்கள் கொள்முதலாலும் முறைகேடுகளாலும் தொடர்ந்து சுரண்டப்பட்டுவருகிறது.
பொறுப்புகளில் இருக்கக்கூடிய ஒரு சிலரின் ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் ஆகாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அவலநிலை தொடர்ந்து தொண்டி பேரூராட்சி பகுதியில் நிலவு வருகிறது...
இது வறட்சி காலமும் அல்லது மிகப் பெரிய குடிநீர் தட்டு தட்டுப்பாட்டிற்கான காலமும் கிடையாது. ஆனாலும் இன்றைய தினம்வரை ஒரு வார காலமாக இன்னும் குடிநீர் வினியோகம் தொண்டி பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை. 30 நாட்கள் குடிநீர் மக்களுக்கு வழங்குவதாக அவர்களுடைய பேரூராட்சியின் பதிவுகளில் எழுதப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் மாதத்தில் நான்கு நாட்கள் கூட தண்ணீர் வருவதில்லை என்பதுதான் மிகப்பெரிய கவலைக்கிடம்.
காவிரி கூட்டு குடிநீர் பழுது என்று கூறப்படுகிறது அதே நேரத்தில்
தொண்டி பேரூராட்சியாள் உருவாக்கப்பட்ட கோவனி பாரூர் உள்ளிட்ட நீர் பம்புகளும் ஒரே நேரத்தில் பழுதடைந்து உள்ளதாக பேரூராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் பேரூராட்சி எவ்வாறு மக்களை அணுக வேண்டும் மிகவும் மோசமான தட்டுப்பாடு மிக்க காலத்தில் கூட லாரிகளின் மூலம் பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் வழங்கிய காலமெல்லாம் ஒரு காலம் உண்டு. ஆனால் தற்போது ஏழு நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படாமல் சொட்டு தண்ணீர் கூட வீடுகளில் இல்லாமல் மக்கள் கேன் தண்ணீர் வாங்கி சமையல் செய்யும் அவல நிலைக்கு தொண்டிப் பேரூராட்சி மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கமிஷனைப் பற்றி மட்டும் கவலைப்படும் ஆட்சியாளர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்காது.
மக்களிடம் வாக்கு வாங்குவதற்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் . லாரிகளில் குடிநீர் கொண்டு வந்து அந்த மக்களுடைய அத்தியாவசிய தேவைக்கான தண்ணீரை கூட விநியோகம் செய்வதற்கு திறன்இல்லை.
இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு தண்ணீர் வராது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இது பேரூராட்சியின் மிகக் கேவலமான நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது.
பத்தாயிரம் முன்பணம் செலுத்தி மாதமாதம் குடிநீர் கட்டணம் கட்டி தண்ணீருக்காக ஒரு சாமானிய மக்கள் மிகப்பெரிய ஒரு தொகையை பேரூராட்சிக்கு செலுத்தி வருகிறார்கள். ஆனால் அந்தப் பணம் முழுவதும் பேரூராட்சி நிர்வாகத்தில் இருக்கும் சிலரின் சுய ஆதாயத்திற்காக முறைகேடுகள் மூலம் பணம் சூறையாடப்படுகிறது. பொய் கணக்குகள் எழுதப்படுகிறது. தமிழக அரசோ இவர்கள் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க நேரமில்லை.
கமிஷனைப் பற்றி மட்டும் கவலைப்படும் மனிதர்களால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் நடக்காது.
பொதுமக்கள் அரசியல் கடந்து பொதுவான சாமானிய மனிதர்களாக சிந்திக்க வேண்டுமே தவிர மக்களுடைய வரிப்பணத்தை நாசமாக்கும் கொள்ளையடிக்கும் இது போன்ற கொள்ளை கும்பலுக்கு ஆதரவாக எந்த நிலையிலும் அரசியல் முடிவுகளை எடுத்து விடக்கூடாது இனிவரும் காலங்களில் சிந்தித்து மக்களுக்காக சேவை செய்யும் உறுப்பினர்களை தேர்வு செய்தால் மட்டுமே
இது போன்ற அவல நிலைகள் மாறும்..
நன்றி :@thondinews
