திமுக-பாஜக நெருக்கம்: வக்ஃப் சொத்துக்களுக்கு ஆபத்து.!
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்ற திமுகவின் உதவி பாஜகவுக்கு தேவைப்படுகிறது. ஒருவேளை திமுக எதிர்த்து வாக்களித்தால் இந்த சட்டம் தோற்றுவிடும்.
திமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தால் இந்த சட்டம் எதிர்ப்பு இல்லாமல் அவையில் மீதம் இருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் பலத்தோடு வெற்றி பெறும். திமுகவை வெளிநடப்பு செய்ய வைக்கும் ரகசிய ஒப்பந்தத்துடன் தான் பாஜக திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதுதான் பாஜகவின் கணக்கு.
மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள் - 245.
பெரும்பான்மைக்கு தேவை - 123.
பாஜக கூட்டணி - 110.
இண்டியா கூட்டணி - 116.
இதே நிலை தொடர்ந்தால் வக்ஃப் சட்டம் தோல்வியடையும்.
திமுகவின் 11 (திமுக 10 + மதிமுக 1) உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால் அவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234-ஆக குறையும். பாஜகவுக்கு உள்ள எம்பிக்கள் 110 மற்றும் பிஜூ தனதா தளம் (9) YSR காங்கிரஸ் (11) ஆகிய ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவோடு வக்ஃப் திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் பாஜக நிறைவேற்றும்.
