தற்பொழுது அனைத்து சமூக வலைதளங்களிலும், இந்த காட்சிகள் பரவலாக பகிரப்பட்ட வருகின்றது.
இந்த சம்பவத்தில், சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் மீது போதையில் வாகனத்தை இயக்கிய பெண்கள் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் வாகனத்தை இடித்துள்ளனர்.
இதில் விபத்துக்குள்ளான நபர் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண்கள் இருவரும் அவரை சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
மேலும், இதனை தடுக்க வந்த போக்குவரத்து காவலரையும் திட்டி உள்ளனர்.
மேலும், சாலையில் உள்ள மற்ற வாகனங்களையும் வழிமறித்து பெரும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கே சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இவ்வாறான போதை பொருட்களை பயன்படுத்தும் பெண்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர்.
