போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பல நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முற்றுகையிட்டு பல நாட்களாகியும் கூட இன்றும் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. மேலும், இதற்கு மாற்று வழியாக மக்களுக்கு வாகனத்தில் கூட குடிநீர் கொடுக்க முடியாத தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தை மக்கள் கண்டித்து தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்களுக்கு தேவைப்படும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூட குடிநீர் இல்லை என்பது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
