நள்ளிரவில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாகைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.