கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழைக்கு வாய்ப்புள்ளது.