இதன் தொடர்ச்சியாக இன்று, நிகழ்வில் கலந்து கொண்ட அரசு அருங்காட்சியக ஆய்வாளர் `திரு.பி.மணிமுத்து' அவர்கள் தொல்பொருள் வேலைவாய்ப்பை தன்னார்வத் தொண்டு மற்றும் பயிற்சிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்ற தலைப்பில் கீழ் மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜமால் முகமது கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர் 'டாக்டர் ஏ. அஸ்லம்' அவர்கள் "புதுமை: ஏன், எப்படி?" என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு உற்சாக உரை நிகழ்த்தினார். மேலும் தாவரவியல் சம்பந்தமான மற்றும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் வரலாற்று துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
