இந்நிலையில் தொண்டியின் நீண்ட நெடிய காலமாக தொண்டி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய மருத்துவ தேவைகள் தொண்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை நம்பியே இருக்கிறது.
இந்நிலையை தொடர்ந்து இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும் முக்கிய மருந்துகள் இல்லாமலும் அவசர உதவி சிகிச்சைகூட கிடைக்காத அவலம் தொடர்கிறது.
பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதை கண்டுகொள்ளாமலும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமலும் இந்தப் பகுதிக்கு தேவையான மருத்துவ வசதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது..
இதனைத் தொடர்ந்து பல்வேறு உயிர்கள் ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் பெருமளவு ஏற்படுகிறது.
ஒரு பேரூராட்சி பகுதியில் கண்டிப்பாக அரசு மருத்துவமனை இருக்க வேண்டிய நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த மருத்துவமனை தரம் குறைக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு ஆட்சி கால கட்டங்களிலும் திமுக கூட்டணியைச் சார்ந்த கட்சிகளே இந்த பகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இருப்பினும் ஒரு சதவீதம் இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே இவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்
இவர்களைத் தொடர்ந்து வெற்றி பெற வைத்த முக்கிய பகுதியாக தொண்டி பேரூராட்சி பகுதி தான் இருக்கிறது.
பல்வேறு நேரங்களில் தோல்வியயின் விளிம்பில் இருந்த இவர்களை காப்பாற்றிய தொண்டிப் பேரூராட்சிக்கு வாக்களித்த அந்த பகுதி மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவுகிறது.
இந்நிலையில் தான் இந்தப் பகுதியில் செயல்படும் எதிர்க்கட்சிகள் தங்களுடைய பணியை செய்யாததால். பொதுமக்களே தங்களுடைய துயரங்களை துடைப்பதற்காக தன்னெழுச்சியாக தொண்டி மக்கள் பணி குழு உடைய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு ஒரு நாள் கடையடைப்பு செய்து இந்தப் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்திருக்கிறார்கள் தொண்டி பகுதி மக்கள். மேலும் இது ஒரு அடையாள எச்சரிக்கை போராட்டம் என்று அவர்கள் அரசிற்கு காண்பித்தது மட்டுமல்லாமல் கோரிக்கை நிறைவேற்ற குறிப்பிட்ட கால அவகாசமும் கொடுத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட அந்தக் கால அவகாசத்திற்குள் செய்து தராவிட்டால் இப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும், தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அரசிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் வியாபாரிகள் தங்களை கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டதும், பெண்கள் அனைத்து சமூகத்தினர் மற்றும் ஜமாத்தார்கள், அனைத்து அரசியல் அமைப்புகள் சமுதாய அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்களுடைய கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலை இந்தப் போராட்டத்தை ஜீரணித்து கொள்ள முடியாத திமுகவை சார்ந்த சிலர் கொடுத்த அழுத்தத்தின் பெயரால் அமைதியாக நடந்த இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வண்ணம் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்ட குழுவினர் நம்மிடம் கூறுகையில் காவல்துறை அனுமதி யோடு அழகான கட்டுப்பாட்டோடு எங்களுடைய போராட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
காவல்துறையும் எங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு கொடுத்து அழகிய முறையில் அவர்களுக்கும் விருந்தோம்பல் கொடுத்து நாங்கள் அனுப்பி வைத்தோம்.
நாங்கள் எடுத்துக் கொண்ட போராட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்ட எல்லா மக்களும் குறிப்பாக அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்கள் போராட்டத்தை பாராட்டியுள்ள நிலையில்
ஆளும் திராவிட மாடல் அரசின் இந்த மக்கள் விரோத செயல்பாடு மிகவும் கவலை அளிப்பதோடு இப்பகுதி மக்களின் மிகப்பெரிய கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
வரும் 2026 தேர்தல் இந்த விடியல் அரசிற்கு விடியாமல் போகும் என்று சம்பந்தப்பட்ட போராட்டக் குழுவினர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதோடு தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயார் என்று உறுதி பட தெரிவித்துள்ளனர்.
திமுகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பகுதியில் இருண்டு வருவதால் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே இந்த பகுதி மக்களிடம் இனி வரும் காலங்களில் ஓட்டு கேட்டு வர முடியும் என்று உறுதியாகத் தெரிகிறது.
இப்பகுதியில் செயல்படும் திமுகவின் நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் மத்தியிலே அதிருப்தியான செயல்பாட்டையே பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் திமுகவின் தலைமை தெளிவாக முடிவெடுத்து இந்தப் பகுதி மக்களையும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அவர்களின் நிரந்தரவாக்கு வங்கி இங்கே இல்லாமல் போய்விடும்..
என்ன நடக்கிறது மாற்றம் வருமா?
விடியல் தருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்...
அன்புடன் மக்கள் தொண்டன்
