ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியான இந்த பகுதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை சுகாதார நிலையமாக தரன் குறைக்கப்பட்ட து
மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தற்போது செயல்பட்டு வரும் இந்த சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாத அவலம் தொடர்கிறது.
தற்காலிக மருத்துவர்கள் ஒரு சிலர் மட்டும் வந்து 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலமும் தொடர்கிறது.
போதிய மருத்துவம் இல்லை போதுமான மருந்துகள் இல்லை ,
தொடர்ந்து நிலவும் மருத்துவர் இல்லாத அவல நிலையால் ecr சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துக்கள். முதலுதவி சிகிச்சை கூட கிடைக்காமல் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்படும் அவல நிலை தொடர்கிறது, குறிப்பாக இரவு நேரங்களில் அவசர சிகிச்சை கிடைக்காமல், இ சி ஆர் சாலையில் மணமேல்குடியை விட்டால் ராமநாதபுரம் மருத்துவமனையை தவிர இடையில் வேறு எங்கும் மருத்துவமனை கிடையாது, 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது, பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழக்கூடிய தொண்டி பகுதிக்கு அடிப்படை மருத்துவம் தேடி ஒவ்வொரு நாளும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் நிலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு வரும் பெரும்பாலான ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுடைய மருத்துவம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான்
தொண்டியில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் கோரியும்,
அரசு தாலுகா சாரா மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும் தொண்டியில் செயல்படும் மக்கள் நல கூட்டமைப்பு என்ற whatsapp குடும்பத்தின் மூலம் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை பொதுமக்கள் மட்டும் வர்த்தகர்கள் உதவியோடு கடை அடைப்பு செய்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை செய்து முடித்திருக்கிறார்கள். காத்திருப்பு போராட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த போராட்டம் அரசின் பல்வேறு வாக்குறுதிகளை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் அடையாளப் போராட்டமாக மட்டும் இதை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுடைய ஆதரவை பெற்றுள்ளனர்.
ஆளும் திமுகவை தவிர்த்து அனைத்து அரசியல் அமைப்புகளும் சமுதாய அமைப்புகளும், ஜமாத்தார்கள், வர்த்தகர்கள் தங்களுடைய கடைகளை அடைத்து விட்டு இந்தப் போராட்டத்திற்கு பெருமளவு ஆதரவு அளித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது, தற்போது செயல்படும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு உடனடியாக மருத்துவர்கள் பணிஅமர்த்துவது, தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் அருகில் உள்ள அரசு நிலத்தை மருத்துவமனை விரிவாக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது, நீர் நிலைகளை முறையாகப் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இதில் மிக முக்கியமான தீர்மானமாக மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் காலங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் போராட்டக் குழுவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை தன்னெழுச்சியாக முன்னெடுத்து சிறப்பாக அனைவரும் வியக்கும் வகையில் நடத்திக்காட்டியது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
