காரணம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததும் அவசர முதலுதவி சிகிச்சை கூட எந்த நேரத்திலும் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத அவலநிலை தொடர்வதாலும். தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மக்களிடம் வீடு தேடி மருத்துவம் என்ற பெயரில் வெற்று விளம்பரத்தை மட்டும் தேடிக் கொண்டு மக்களை ஏமாற்றும் இந்த அரசு உண்மையாகத் தேடி வரும் மக்களுக்கு சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத அவல நிலையை உருவாக்கிஉள்ளது என்று கொந்தளிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் திட்டமிட்டு தரம் குறைக்கப்பட்ட நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் ஸ்கேன் எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் இங்கு செயல்பட்டு வந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் ஐந்து மருத்துவர்கள் ஒரு பெண் மருத்துவர் உட்பட சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் தற்போது கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தொடர்ந்து மருத்துவர்கள் இல்லாமல் சாமானிய ஏழை எளிய பாட்டாளி விளிம்புநிலை மக்கள் மருத்துவம் கிடைக்காமல் அவதியுற்று வருகிறார்கள் .
இந்நிலையில்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் தொண்டி பேரூராட்சி பகுதிக்கு முறையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கக் கோரி தொண்டி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் தன்னெழுச்சி போராட்டம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு கடந்த சில தினங்களாக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இந்தப் போராட்டமானது திட்டமிட்டபடி மக்களுடைய பெரும் ஆதரவோடு வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம்முன்பு போராட்டம் துவங்க இருக்கிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சமுதாய அரசியல் அமைப்புகளும், இப்பகுதியில் உள்ள வர்த்தக சங்கமும் iஆதரவு தெரிவித்து ஒரு நாள் கடையடைப்பும் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்
போராட்டக் குழுவின் சார்பில் 25-12-2024நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் போராட்டம் நடத்துவது சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் பேசப்பட்ட நிலையில் இந்த செய்தியை சமூக வலைதளங்களிலும் வெளியானது
இதனைத் தொடர்ந்து ஆட்சியாளர்கள் சார்பில் வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டக் குழுவின் ஒரு பிரிவினரை அழைத்து 26-12-2024
இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் முடிவுஏதும் எட்டப்படவில்லை மேலும் பொதுமக்கள் சார்பில் இந்த காத்திருப்புப் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெறுவதால் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று அந்தக் குழுவின் சார்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கிராம பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
போராட்ட அழைப்பிதழ் பல்வேறு தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் 30 மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும் என்று உறுதியாக நம்பப்படும் நிலையில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மக்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகிறது.
விடியல் ஆட்சியில் விடியாமல் இருக்கும் மருத்துவத்துறை இந்த பகுதி மக்களுக்கு இப்போராட்டத்தின் மூலம் விடியலை பெற்றுதருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்...
...@தொண்டிநியூஸ் செய்திகளுக்காக
மக்கள் தொண்டன்
